AbeBooks.com
AbeBooks.com என்பது புதிய, பழைய, அரிய மற்றும் வெளியீடு முடிவுற்ற புத்தகங்கள் மற்றும் சேகரிப்புப் பொருட்கள் உட்பட இலட்சக் கணக்கான நூல்களை பட்டியலிடும் ஆன்லைன் சந்தையானது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில்முறை புத்தக விற்பனையாளர்களின் நூல்களைப் பட்டியலிடுகிறது.
ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய புத்தகங்களை, சேகரிப்பாளர் அரிய புத்தகங்களை, மாணவர்கள் புதிய மற்றும் பழைய பாடநூல்களை மற்றும் புதையல் தேடுபவர்கள் நீண்டகாலமாக இழந்தவை போன்ற நூல்களை கண்டுபிடிக்க உதவுகிறது. AbeBooks.com ஆர்வமானவர்களுக்கு நூலை வாங்கவும் விற்கவும் உலகமெங்கும் தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
நூல்களின் தனிச்சிறப்பு பட்டியலில், 15ஆம் நூற்றாண்டின் அரிய பழமையான புத்தகங்கள், வெளியீடு முடிவுற்ற நூல்கள், ஆயிரக்கணக்கான கையெழுத்துப் புத்தகங்கள், பல கோடான கணக்கான பழைய புத்தகங்கள், அளவைத்துறைக்கான பாடநூல்கள் மற்றும் புதிய புத்தகங்களின் பரந்த தேர்வு உள்ளன.